Skip to content

CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை  சென்னை திரும்பும் வழியில் திருச்சி வந்தார்.

திருச்சி  மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  படித்து   பொது சட்ட நுழைவுத்தேர்வில்(Common Law Admission Test) வெற்றி பெற்ற  மாணவி ராகினியை சந்தித்து  பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பேனா பரிசாக அளித்தார் ‌, மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

முதல்வர் ஸ்டாலின், நேரில் அழைத்து வாழ்த்தியது குறித்து  மாணவி ராகினி கூறியதாவது:

நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி பெற்று சட்டம் படிக்க பொதுச் சட்ட சேர்க்கைத்  (CLAT ) தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது வாழ்த்து என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. இன்னும் நன்றாக படிப்பேன்.

இவ்வாறு  மாணவி ரோகினி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்,   ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் , மாணவ , மாணவிகள்  கலந்து கொண்டு CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ராகினிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

error: Content is protected !!