தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும் நிலை உள்ளது இதற்கான தீர்வு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் 25 சதவீதம் பணியிடங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 25 லிருந்து ஐந்தாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதனை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
