Skip to content

பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை… அமைச்சர் மகேஷ் தகவல்

திருச்சி செம்மொழி மன்றம் மற்றும் திருச்சி தமிழ் சங்கம் இணைந்த நடத்தும் தன்னோர் இலாத தமிழ், முத்தமிழ் மாநாடு திருச்சி தமிழ் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் தமிழ் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
விழாவில் உலக சாதனை விருது பெற்ற திருச்சி லால்குடி, அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனைவர் தாமரை உலகிலேயே முதல் முறையாக பழந்தமிழ் நூலான தண்டியலங்காரத்தில் பொருளடிகள் அனைத்தையும் 35 வினாக்கவிகளாக புத்தகம் செய்து வடிவமைத்த புத்தகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் பொழுது நமக்கு தாமரை தேவையில்லை. ஆனால் இந்த புத்தகத்தை எழுதியுள்ள முனைவர் தாமரை நமக்குத் தேவை, தமிழை நேசிக்கின்ற இது போன்ற தாமரை தமிழகத்தில் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது என கூறினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பள்ளிகளின் அருகே சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிந்தவரை பள்ளி நுழைவு வாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெடிக்கும் நபர்களை ஐபி அட்ரஸ் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறையின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்புகளை பொறுத்த வரை மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கழிவறைகள் காம்பவுண்டுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. காமராஜர் காலத்திற்குப் பிறகு பள்ளி கட்டிடங்கள் நாங்கள் தான் அதிகமாக கட்டி வருகிறோம். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வருகிறது

error: Content is protected !!