சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார், மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
எஸ்.பி.யை ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினீர்கள்., அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். அஜீத்தை போலீஸ் நிலையத்தை வைத்து விசாரிக்காமல் ஏன் வெளியே கொண்டு போய் விசாரித்தீர்கள். அதற்க அதிகாரம் கொடுத்தது யார்?
சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஏன் விசாரித்தார்கள். இதற்கு அழுத்தம் கொடுத்தது யார்: ? இதற்கு டிஜிபி பதில் அளிக்க வேண்டும்.
சிசிடிவி காட்சிகளை மறைக்க வெளியிடத்துக்கு கொண்டு சென்று விசாரித்தீர்களா, அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும். மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு?
இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
மடப்புரம் கோவிலுக்கு வந்த டாக்டர் நிகிதாவின் 10 பவுன் நகை தொலைந்ததால் சந்தேகத்தின் பேரில் அஜீத்குமாரை பிடித்து விசாரித்து உள்ளனர். டாக்டர் நிகிதா ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு நெருக்கமானவராம்.
நகை தொலைந்ததால் அவர் ஐஏஎஸ் அதிகாரிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அவர் எஸ்.பி. ஆசிஷ் ராவத்துக்கு போன் செய்து உள்ளார். அதன் பேரில் தான் போலீசார் இந்த வழக்கில் தீவிரம் காட்டி உள்ளனர். அதனால் காவலாளி அஜீத்குமார் உயிர் பறிபோய் இருக்கிறது.