பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது. இதில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் ஆகிய இருவரும் ராமதாஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சேலம் அருளை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி விட்டதாக அன்புமணி அறிவித்து உள்ளார். அவர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக பேசி வருவதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி, 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதாம், ஆனால் அருள் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவுபடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளை நீக்குவதாக அன்புமணி அறிவித்து உள்ளார்.