இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜெஹான் மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ம் ஆண்டு முகமது ஷமி திருமணம் செய்த ஹசின் ஜெஹான் 2018ல் விவாகரத்து பெற்றார். 2023ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஷமி தமது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.50,000 மற்றும் மக்களுக்கு 80,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஹசின் ஜெஹான் தொடர்ந்த வழக்கில் தனக்கு மாதம் தோறும் 7 லட்சம் ரூபாயும் மகளுக்கு 3 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாதம் தோறும் 1. 30 லட்சம் ரூபாயும் மகளுக்கு 2.30 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று முகமது ஷமிக்கு உத்தரவிட்டனர்.