புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே நேற்று மாலை காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் .பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக டாட்டா 407 வாகனம் வேகமாக வந்தது. (KA 03 D 3159). சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்த போது அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் (375 கிலோ), கூல் லிப் (25.576 கிலோ), விமல் பான் மசாலா (73.200 கிலோ), மற்றும் V1 புகையிலை (10.368 கிலோ) உள்ளிட்ட சுமார் 507 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவற்றை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனம் கைப்பற்றப்பட்டு வாகனத்தில் வந்த நவீன் குமார் (35/25), S/o அஸ்வநாத் நாராயணன், வெங்கடாபுரம், கொரட்டாங்கிரி தாலுகா, கர்நாடகா (வாகன ஓட்டுநர்) என்பவர் கைது செய்யப்பட்டார்.