Skip to content

தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

 திமுக சார்பில் ,ஓரணியில்  தமிழ்நாடு  என்ற  இயக்கத்தை தொடங்கி  உள்ளது. அதுபோல அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற  பிரசார இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி இதனை  தொடங்குகிறார்.

பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், 19-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
21-ம் தேதி மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகள், 22ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகள், 23-ம் தேதி, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்’
இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் மற்ற இடங்களுக்கு அடுத்த கட்ட  பிரசாரம் இருக்கும் என அதிமுக வட்டாரத்தில்  தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!