Skip to content

விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

திருப்புவனம் இளைஞர் மரணம் எதிரொலியகா அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கூட்டத்தில் மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

tamilnadu adgp davidson devasirvatham orders police officers to keep gun all time: எஸ்ஐ முதல் டிஎஸ்பி வரை.. இனி இது ரொம்ப முக்கியம்.. மறந்துறாதீங்க.. ஏடிஜிபி டேவிட்சன் அதிரடி ...

அதன்படி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் வாங்கி வருமாறு அலைக்கழிக்க கூடாது,  முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும்,  சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடக் கூடாது, விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது.

சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும், காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக FIR;  CSR கொடுக்க வேண்டும், அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது, புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!