Skip to content

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது,  பஸ்சில் இருந்த சங்கரன் (32) என்ற வாலிபர் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் தகராறில்ஈடுபட்ார்.

டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து வாலிபர் சங்கரனை பஸ்சிலிருந்து இறக்கி விட்டனர்.இந்த நிலையில் கீழே இறங்கிய வாலிபர் சங்கரன் திடீரென்று பஸ்சின் பின்பக்கம் சென்று கல்லை எடுத்து கண்ணாடியை உடைத்து விட்டார். இது குறித்து பஸ் டிரைவர் குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரனை கைது செய்தனர்.

error: Content is protected !!