Skip to content

பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

நடிகை  நயன்தாரா,  அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று காலை தனது  மகன்கள்  உயிர் மற்றும் உலக்குடன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலுக்கு வந்தனர்.  நயன்தாரா வந்திருப்பதை அறிந்த  ரசிகர்கள் அங்கு திரண்டனர். பின்னர் நயன்தாரா குடுமபத்துடன்  ரோப்கார் மூலம் மலைகோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு தரிசனம்  செய்தனர்.

அதைத்தொடர்ந்து கோவில் சார்பில் நயன்தாரா  குடும்பத்துக்கு பிரசாதங்கள், சாமி படங்கள் வழங்கப்பட்டன.  சிறிது நேரம் கோவிலில் இருந்து விட்டு  நயன்தாரா அங்கிருந்து  புறப்பட்டார்.

தற்போது நயன்தாரா  மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க  வேண்டும் என்ற நேர்த்திக்கடனுடன் அவர் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!