கிராமக நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்கான TNPSC குரூப் 4 தேர்வு வரும் 12 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வினை எழுதுவதற்காக 13 லட்சத்து 89ஆயிரத்து 738 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மொத்த பணியிடங்கள் 3915. அதாவது ஒரு பணி பணியிடத்துக்கு 353 பேர் வீதம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இவர்களு்ககான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு விட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்த குரூப் 4 தேர்வுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் போட்டியிட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்தனர்.
அவற்றை ஒப்பிடும்போது தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.