இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முத லில் இந்தியா பேட் செய்தது. தொடக்கநாளில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்தது இந்தியா.
கேப்டன் கில்(114ரன்), ஜடேஜா(41) ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர்.
2ம் நாளான நேற்று இருவரும் தொடர்ந்து ஆடினர். நேற்று இந்தியா 587 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதில் கேப்டன் கில், மட்டும் 269 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவர் 387 பந்துகளை சந்தித்து 30 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த இமாலய ரன்களை சேர்த்தார்.
அதன்பிறகு ஆடிய இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் முடிந்தது. தொடர்ந்து இன்று பிற்பகல் 3வது நாள் ஆட்டம் தொடங்கும்.
நேற்று இரட்டை சதத்தை கடந்த 269 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரே நாளில் 13 சாதனைகளை படைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்,
இந்திய கேப்டனாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர்.
முதல் 2 டெஸ்ட்களிலும் சதம் அடித்த 2வது இந்திய கேப்டன். இதற்கு முன் அசாருதீன் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இங்கிலாந்தில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் கில்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற SENA நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
ஒருநாள் போட்டிகளில் முதல் 50 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
கேப்டனாக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
ஒரே நாளில் 13 சாதனைகளை படைத்த கில் இனி கிரிக்கெட் உலகின் கில்லி தான்.