நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக பழத்தின் விதை அவனது தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறியுள்ளான் ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கண்கள் மேலே சென்றுள்ளது. உடனடியாக அந்த சிறுவன் ரியாஸை காப்பாற்ற உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாத நிலையில் அந்த சிறுவனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு சிறுவனை சோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.