திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி இடத்தை போலி பட்டா செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறும் போது..,
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம் கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (89). அவரது கணவர் செல்லச்சாமி.இவர் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டா ஒதுக்கப்பட்டுள்ளது. கணவர் இறந்த நிலையில் அதை சரஸ்வதி அம்மாள் பெயருக்கு 2023 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதே எண் கொண்ட இடத்திற்கு மோட்ச மேரி என்ற பெயரில் முன்னதாகவே பட்டா உள்ளதாக கோரி அவர்களது இடத்தை தங்கள் பேருக்கு மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்ட வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தரையில் விழுந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் செவி சாய்க்காததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.