கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 7ம் தேதி திங்கள் கிழமை கரூர் மேலப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோவிலின் ,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்ற பால்குடம், தீர்த்த குடம் எடுத்து , மேளதாளம் தாரை தப்பட்டை முழங்க தேவராட்டம் ஒயிலாட்டம் ஆடியபடி ஊர்வலமாக பக்தர்கள்
வந்தனர். இந்த ஊர்வலத்தில் கருப்பண்ணசாமி மற்றும் அம்மன் வேடமிட்ட கலைஞர்கள் மேலும் நடனமாடும் குதிரைகள், பட்டத்து யானை ஒட்டகங்கள், ஜல்லிக்கட்டு காளைகள் ஊர்வலத்தில் பங்கேற்று இருந்தது.
இது தொடர்ந்து , நாளை மற்றும் நாளை மறுநாள் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, 1-ம் காலம்,2ம் காலம் 3ம் காலம் யாக பூஜை. ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல் நடைபெற உள்ளது. மேலும் வரும் 7- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.