உணவு பொருள் கடத்தல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரெண்ட் வின்சென்ட் தலைமையில் , இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர்கள் மணப்பாறை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். மணிகண்டம், மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, தெத்தூர் பிரிவு ரோடு அருகே பாண்டி செல்வம் s/o தங்கசாமி ,ஒத்த கோயில் பட்டி மேலூர் (மதுரை மாவட்டம்) என்பவர் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மற்றும் வாகனத்துடன் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 1075 கிலோ. இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய
TN59DX3431 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இவர் ரேஷன் அரிசியை கள்ளசந்தையில் வாங்கி விற்று வந்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.