தாவக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேவமணியின் மகன் பிரபாகரன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன் த் தங்க(காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொறுப்பாளர்) கடந்த 4ஆம் தேதி வெள்ளிக்கிழமைமயிலாடுதுறையில் நடைபெற்ற த.வா.க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, காரைக்கால் நோக்கி சென்ற போது செம்பனார்கோவில் பகுதியில் இரண்டு கார்களின் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாண்டிச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை
நடைபெற்று வந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்தில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் தேவமணியின் மகனும், தற்போதைய, பாமக மாவட்ட செயலாளருமான பிரபாகரன்(29), அவரது நண்பர்கள் குணசேகரன்(23) முருகன்(23) மற்றும் வீரமணி (45) ஆகிய நான்கு பேர் சரண் அடைந்தனர். மேலும், விழுப்புரம் அடுத்த வளவனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன்(36), சரவணன்(33), சுகன்ராஜ்(29). சரவணன்(28), அஜய்(22). முகிலன்(23), விஜயசங்கர்(30) ஆகிய 7 பேர் சரணடைந்தனர். இதையடுத்து, சரண் அடைந்த அனைவரும் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களிடம் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 11நபர்களு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்.