Skip to content

உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

கென்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் கோவை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.அவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

கென்யா நாட்டில் ரோல் பால் உலகப் போட்டி 2025 கடந்த ஜூன் மாதம் 6 நாட்கள் நடைபெற்றது.இதில் இந்தியா, இலங்கை உட்பட 10 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்தியாவை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் முதல் முறையாக நடந்த ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர்.

ஜூனியர் போட்டியில் அரை இறுதியில் இலங்கை அணியை எதிர்கொண்ட தமிழக வீரர்கள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.இறுதிப் போட்டியில் கென்யாவுடன் மோதிய தமிழக அணியினர் கோப்பையை கைப்பற்றினர்.கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனை தீக்சனா ஸ்ரீ, ரோஹித்,வியாஸ் ஆகியோர் அபாரமாக ஆட்டத்தை ஆடி வெற்றி பெற்ற வழிவகுத்தினர்.

இந்தியா கோச் பாய்ஸ் டீம் மற்றும் கோவை மாவட்ட ரோல் பால் சங்கச் செயலாளரும் ராஜசேகர்,ஸ்போட்ஸ் தமிழ்நாடு மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு அசோசியேசன், கோவிந்தராஜ் மாநில செயலாளர்,எம்பி சுப்பிரமணியன்,தென் இந்திய செயலாளர் செல்லத்துரை,தமிழ்நாடு தலைவர் ராபீன் ராஜகாந்தன்,குமரகுரு பிஆர்ஓ மற்றும் பெற்றோர்கள்
உள்ளிட்டார் பாராட்டினர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:-

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்றும் வருங்காலத்தில் ரோல்பால் போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் சார்பாக விளையாட்டு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!