Skip to content

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கோஷங்களை எழுப்பியவாறு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மாணவர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!