Skip to content

போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவன் தற்கொலை

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் தனவீரன். இவரது மகன் பிரவீன் ( வயது 20).இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.இதனால் கடுமையான மன உளைச்சலில் பிரவீன் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 30 – ந் தேதி எலிகளைக் கொல்ல பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தினார்.உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் தில்லை நேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கும் சென்னைக்கும் அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

கடலூர் மாவட்டம் ஸ்ரீ புதுப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48).இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் வந்தார்.திருச்சி விமான நிலையத்தில் இவரது உடைமைகள் மற்றும் பயண ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.இதை அடுத்து சண்முகத்தை இமிகிரேஷன் அதிகாரி முகேஸ்வராம் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

லாட்டரி விற்ற 2 பேர் கைது… 

திருச்சி உறையூர் குளுந்தலாயி அம்மன் கோவில் மந்தை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக தில்லை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன், உறையூர் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற சரவணன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

பல கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு

தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநிலத் தலைவர் பாலன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் சலவை தொழிலாளர்கள் கலெக்டர் சரவணனிடம் ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-
திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை பகுதியில் 88 ஆயிரத்து 762 சதுர அடி நிலம் எங்கள் சங்கத்துக்கு சொந்தமானது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 17 கோடியாகவும் இதனை ஒரு தனிநபர் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளார். மேலும் அந்த தனிநபர் வீட்டுமனையாக அதை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தாங்கள் அதனை தடுத்து நிறுத்தி சங்கத்துக்குரிய நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34) இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 4ந் தேதி திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆனந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

திருச்சி செந்தண்ணீர் புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் . இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28) காதல் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு தனபிரியா ( வயது 25) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தகராறில் மனைவி தனப்பிரியா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரஷீத் அகமது நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.தகவல் அறிந்து மத்திய பேருந்து நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது சாக்கடை கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதையடுத்து கோ அபிஷேகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார் த எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப் போது அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இனதயடுத்து இமிகிரேசன் அதிகாரி அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55 )என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகார் என்பதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!