நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவின் ‘ கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அருணா. இவரது கணவர் மோகன் குப்தா தொழிலதிபராவார். இவர் வீடுகளில் உட்கட்டமைப்பு மற்றும் அலங்கரப்பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி
வருகிறார்.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தொழிலாளர் மோகன் குப்தாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.