Skip to content

தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது

புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக வந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 242க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் சி ஐ டி யு , ஏஐடியூசி, ஐ என் டி

யு சி, எல்பி எஃப் உள்ளிட்ட 11 சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு தஞ்சை தலைமை தபால் நிலையம் வரை மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வேதனையாக வந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!