நடிகை ஆலியா பட்டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி, ஆலியா பட்டின் நிறுவனத்திலும் அவரின் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து ரூ.77 லட்சத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நடிகை ஆலியா பட்டின் முன்னாள் தனி உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி செவ்வாய்க்கிழமை மாலை ஜூஹு போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேதிகா மீது போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடிகர் ஆலியா பட்டிடமிருந்தும், அவரது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்தும் ரூ.76.90 லட்சம் தொகையை திருடியதாக வேதிகா மீது புகார் எழுந்துள்ளது. மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை ரூ.76.90 லட்சம் மோசடி செய்துள்ளார். பெங்களூருவில் பதுங்கியிருந்த வேதிகா ஷெட்டியை கைது செய்து மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.