Skip to content

கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

1998ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் பிரசாரத்திற்காக பிப்ரவரி 14ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அன்றைய தினம் கோவையில் 12 இடங்களில்  குண்டுகள் வெடித்தது. சங்கிலி தொடர்போல  பஸ் நிலையம்,  மருத்துவமனை, கடைவீதிகள் என  குண்டுகள் வெடித்தது. இதில் 58 பேர்  கைது செய்யப்பட்டனர். அல் உம்மா தீவிரவாதிகள்  அத்வானியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தினர். இதற்க மூளையாக செயல்பட்டு பாட்சா உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாட்சா  சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த வழக்கில் இதுவரை  டெய்லர் ராஜா,  முஜிபூர் ரகுமான்,  அயூப் ஆகிய 3 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களில்  டெய்லர் ராஜாவை  போலீசார்  சட்டீஸ்கர் மாநிலத்தில் கைது செய்தனர். 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள மற்ற இருவர் குறித்தும் அவரிடம் போலீார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.

error: Content is protected !!