Skip to content

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மல்லை சத்யா, கடந்த  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என  ஏற்கனவே துரைவைகோ கோரிக்கை வைத்த நிலையில், பின்னர் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது.

தற்போது  இந்த பிரச்னை முற்றி விட்டது.  மல்லை சத்யாவை நீக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லை சத்யா கூறியதாவது:

3 முறை   ைவகோவின்  உயிரை காப்பாற்றி உள்ளேன் எனக்கு துரோகி பட்டம் சூட்டி உள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்தவர், இப்போது  வாரிசுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து உள்ளார்.  வைகோவிற்காக பல ஆண்டு காலம் உழைத்த எனக்கு துரோகி பட்டமா என்றும் கேட்டு உள்ளார்.  என்னை கட்சியில் இருந்து வெளியேற்றி முயற்சி செய்கிறார் வைகோ /

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வைகோ கூறியதாவது:

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன்  தினமும் தொடர்பில் இருக்கிறார் மல்லை சத்யா.  உளவுத்துறையில் உள்ள எனது நண்பர்களே இதனை தெரிவித்து உள்ளனர். மலலை சத்யா பிரச்னையில் திமுக பின்னணியில் இருப்பதாக  நான் கருதவில்லை. இதனால் மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்கள் விலகியபோது கூட கட்சியில்  நெருக்கடி ஏற்படவில்லை.  அவர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் .

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் இன்று மதிமுக  நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது. இதில் மல்லை சத்யா நீக்கப்படலாம் என தெரிகிறது.

error: Content is protected !!