தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூரில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு மாநில துணை செயலாளர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார மையங்களில் MLHP களை உட்பகுத்தும் உத்தரவை திரும்ப பெற வேண்டும், Mlhp தடுப்பூசி பணிகளை ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட VHN/ANM காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், MRMPS திட்டத்தினை சமூக நலத்துறைக்கு மாற்றிட வேண்டும் சுகாதார செவிலியர்களின் உழைப்பையும் நேரத்தையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் MRMPS திட்டத்தை ஏற்கனவே இருந்த சமூக நலத்துறைக்கு மாற்றிட வேண்டும்,
போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.