நடிகர் விஜய் கட்சியின் அடுத்த மாநாடு மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை, விக்கிரவாண்டி, கோவை என பல இடங்களில் கூட்டங்களை நடத்திய விஜய் அடுத்ததாக மதுரையில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் வேலை தொடங்கி உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத, அதே நேரத்தில் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக உள்ள இடமாக தேர்வு செய்கிறார்கள். இதற்காக பல இடங்களில் இடத்தை பார்த்து இருக்கிறார்கள். இன்னும் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. விரைவில் அந்த பணியை முடித்து செப்டம்பரில் மாநாடு நடத்தப்படலாம் என தெரிகிறது.