Skip to content

தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இன்று மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொகை தின உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து இந்த விழிப்புணர்வு பேரணியை டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் , சிசு கொலைகளை தடுப்போம், ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளை பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டு அண்ணா நூற்றாண்டு மண்டபம் வரை சென்றனர் .‌ செல்லும் வழியில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.‌ இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!