Skip to content

திருச்சியில் மா., கம்யூ சார்பில் மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவிலான அரியமங்கலம் குப்பை கிடங்கில் சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் மலைப்போல குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரின் 65 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் சுமார் 750 டன் குப்பைகள் தினசரி அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர், காற்று ஆகியன மாசுபடுகிறது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது. சுகாதார சீர்கேட்டால் நோய்கள் பரவுகிறது.
குப்பை கிடங்கை சுற்றிலும் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த குப்பை கிடங்கை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு ஏழை, எளிய மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குப்பை கிடங்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர்.காட்டூர் பகுதி குழு நவநீதகிருஷ்ணன்,பாலக்கரை பகுதிக்குழு கனல் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன்,பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளருக்கு செல்வன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜா,கார்த்திகேயன் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!