Skip to content

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி எஸ்கேப்…

திருச்சி மத்திய சிறையில் இருந்து போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறையில் இன்று நடந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49).. விவசாயி இவர் போக்சா வழக்கில்,கடந்த 2023 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.சிறை பணிக்காக தினமும் மற்ற கைதிகளுடன் ராஜேந்திரனை காலை ஐந்து முப்பது மணி அளவில் பணிக்கு விடுவார்கள்.எட்டு முப்பது மணி அளவில் அனுப்பப்பட்ட கைதிகளின் விவரம் குறித்து கணக்கெடுப்பார்கள். இந்நிலையில் சிறை பணிக்காக ராஜேந்திரன் இன்று அதிகாலையில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் பணி முடிந்து சுமார் காலை 8.30 மணி அளவில் சிறை அதிகாரிகள் கைதிகள் விவரம் குறித்து கணக்கெடுத்தனர்.அப்போது ராஜேந்திரனை காணவில்லை.
எதிர்பாராத விதமாக அவர் தப்பி ஓடிவிட்டார்.இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் திருச்சி சிறையை சுற்றியுள்ள பகுதி,மற்றும் தஞ்சாவூர்,அவரது நண்பர் உறவினர்கள் வீடுகளில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியுள்ளனர்.திருச்சி சிறையில் இருந்து இன்று காலையில் கைது தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!