தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு…
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு தலைவர் மயில், பழைய ஓய்வு திட்டம் குறித்து தமிழக அரசு சார்பில் 3 நபர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆயினும் அந்தக் குழு செயல்படவில்லை. தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். இடை நிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியம் முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. எனவே பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16 , 17 மற்றும் 18ம் தேதி தொடர்மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.