Skip to content

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர் (வி விஷன்) மேலாளராக இருந்து வந்தவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர், கட்டபுலி நகரை சேர்ந்த வீரதேவர் மகன் முத்துச்சாமி வயது 65. இவர் காலை 7 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
இன்று 8:00 மணி ஆன பிறகும் அவரது அறை திறக்கப்படாததால் அங்கு இருந்த காவலாளி முருகேசன் கதவைத் தட்டி உள்ளார். தவு திறக்கப்படாததால் தியேட்டர் செக்யூரிட்டி முருகேசன் கதவைத் திறந்து பார்த்தபோது அவரது

அறையில் மேலாளர் முத்துச்சாமி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளர் தனபாலுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

தியேட்டருக்கு வந்த உரிமையாளர் குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!