இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு டெஸ்ட்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3 வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்களே எடுத்த நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. இதில் 192 ரன்களில் இங்கிலாந்து நடையை கட்டியது.
அதைத்தொடர்ந்து எளிய ஸ்கோர் என்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. நேற்று 17.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இந்தியா 58 ரன்கள் மட்டுமே எடுத்தது- ராகுல் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை. கையில் 6 விக்கெட் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து இன்னும் 6 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி இங்கிலாந்து பக்கம் போய்விடும்.
தற்போதைய நிலையில் வெற்றி என்னும் பூனை மதில் மேல் நிற்கிறது. இங்கிலாந்து, இந்தியா என எந்த பக்கம் வேண்டுமானாலும் குதிக்கலாம். பூனையை லாவகமாக தம் பக்கம் திருப்ப இரு அணிகளும் முயற்சி செய்யும். நேரம் அதிகமாக இருப்பதால் இதில் ரிசலட் கிடைக்கும். அது யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.