Skip to content

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் ( 27). இவர் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டிற்கு சென்ற உதயகுமார், அச்சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிப்படைந்த சிறுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

error: Content is protected !!