Skip to content

செப் 28ம் தேதி குரூப்2, 2 ஏ தேர்வு : TNPSC இன்று அறிவிப்பு

  • by Authour

டிஎன்பிஎஸ்சி குரூப் 2,  2ஏ பயணியிடங்களுக்கு  வரும் செப்டம்பர் 28 ம் தேதி  முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது. இதில் குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி,  முதுநிலை வருவாய் ஆய்வாளர்., சார் பதிவாளர், வனவர் மற்றும்  உதவியாளர் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.   தேர்வு எழுத விரும்புகிறவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி ஆகஸ்ட் 13. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இதனை அறிவித்து உள்ளது.

error: Content is protected !!