Skip to content

அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்து 24 பயனாளிகளுக்கு ரூ.6,32,438 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரெத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன் படி, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறை சேவைகள் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் பொருட்டு, அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் துவக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்; “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்து பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும். அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறை சேவைகள்ஃதிட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” இன்று (15.07.2025) துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை 36 முகாம்களும், ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை 36 முகாம்களும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 23 முகாம்களும் ஆக மொத்தம் 95 முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்படி 95 முகாம்களில் நகராட்சி பகுதிகளில் 16 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 4 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 75 முகாம்களும் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும் ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள். அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசுத்துறைகளின் சேவைகள்ஃதிட்டங்களை விவரித்து, அதில் பயனடைவதற்கான தகுதிகள். தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும் விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனர். மேலும் இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இம்முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்க்கு நேரில் வந்து தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
முதற்கட்டமாக, அரியலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று துவங்கி 14.08.2025 வரை ஒரு மாத காலத்திற்குள் 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, துவக்க நாளான இன்று செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனக்குறிச்சி, ஆலத்தியூர். மணக்குடையான் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 2799 குடும்பதாரர்கள் திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில், ஆதனக்குறிச்சி கிராமம் அம்மன் திருமண மண்டபத்தில் முகாம் துவங்கி வைக்கப்பட்டது. மேலும், இன்று, அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 14, 17, 18 வார்டுகளை ஒருங்கிணைத்து அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒரு முகாமும். தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அணைக்குடம், சிந்தாமணி, சோழமாதேவி, கோடங்குடி, ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கோடங்குடி மாரியம்மன் கோவில் திடலில் ஒரு முகாமும் ஆக கூடுதல் 3 முகாம்கள் நடைபெறுகின்றன.
இம்முகாம்கள் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, முதலில் பகுதிகள் வாரியாக, தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி. 07.07.2025 முதல் தொடங்கி நடைபெற்றது. இப்பணிக்காக 303 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக, ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை 36 முகாம்கள் நடைபெற உள்ளன. மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 வரை 23 முகாம்கள் நடைபெற உள்ளன. இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் இடம் ஆகியவை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் தன்னார்வலர்கள் வாயிலாகவும். செய்தித்தாள் வாயிலாகவும், ஆட்டோ விளம்பரங்கள் வாயிலாகவும் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தேவைப்படும் அரசின் சேவைகளை பெற்று பயனடைய வேண்டும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி உடையார்பாளையம் வருவாய் கோட்டாசியர் ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!