புதுக்கோட்டைமாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருமலை ராய சமுத்திரம் ஊராட்சி மேட்டுப் பட்டி இந்திரா நகர் பகுதியில் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர் சந்திரசேகரன், இப்ராஹிம் பாபு, சூர்யா பழனியப்பன், வேங்கை அருணாசலம், பாருக்ஜெய்லானி,செம்பை மணி ,தீன் முகமது ,குட்லக் முகமது மீரா ,மேப் வீரையா ,சிவக்குமார், மக்கள் கோபால், காதர் மைதீன் காதர் ஜமீல் ,வீரமணி, தினேஷ் குமார் , துரைக்கண்ணன் , ஆனந்தன் , ஆறுமுகம், திருக் கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன் கணேசன் சோலை திருநாவுக்கரசு மணி மகளிரணித் தலைவர் சிவந்தி அமுதா அஷ்டலட்சுமி மகாலட்சுமி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்