தேசிய முற்போக்கு திராவிட கழக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஷாகுல் ஹமீது, மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி, மாநில மாற்றுத்திறனாளி அணி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல், வழக்கறிஞர் ஐயப்பன், துணை செயலாளர்கள் ராஜ்குமார், பிரீத்தா விஜய் ஆனந்த், பகுதி செயலாளர்கள் அலெக்சாண்டர், அருள்ராஜ், மோகன், மாவட்ட நிர்வாகிகள் தேவா, கோபி, மைக்கேல்ராஜ், வைத்தியநாதன், ராஜன், சரவணன், பழனிகுமார், நாகாமணி, மகளிர் அணி நிஷாந்தினி, அறிவழகன், தண்டபாணி, லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..
- by Authour
