தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்தனர்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணிபிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும்.
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதி தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகுதி தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 6000 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி முதல் நாளான இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ஆற்று பாலம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண் ஆசிரியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றினர். ஆசிரியர்களின் போராட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.