நடிகர் ரஜினிகாந்தை நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவருடைய ரசிகர்கள் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆனாலும் நாங்கள் எப்போதும் நண்பர்கள் தான் என்று இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் நிரூபித்திருந்தனர். கமல்ஹாசனை தொடர்ந்து இப்போது நடிகர் நெப்போலியன் ரஜினிகாந்தை சந்தித்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது வீட்டு நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினியை நேரில் சென்று அழைத்தபோது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் நெப்போலியன். எஜமான் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் நெப்போலியன் தான் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை இப்போது பார்த்தாலும்
நெப்போலியன் மீது அனைவருக்கும் கோபம் வரும். அந்த அளவிற்கு வானவராயன், வல்லவராயன் கேரக்டரில் இருவரும் வாழ்த்து இருந்தனர். ரஜினிகாந்தை பழிவாங்க வேண்டும் என்று மீனா வயிற்றில் குழந்தை வளர கூடாது என்பதற்காக கருவையே அழித்த கேரக்டரில் தான் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த கேரக்டரை பார்த்து ஊர்க்காரர்கள் எல்லாம் திட்டியது போதாது என்று நெப்போலியனுக்கு பெண் பார்த்து இருந்த பெண்ணும் அவரைப் பார்த்து பயந்து இருக்கிறார்.
இவரை நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் சினிமா வேறு, நடிப்பு வேறு என்று எல்லோரும் சொல்லியதால் தான் நெப்போலியனை அந்தப் பெண் திருமணம் செய்து இருக்கிறார். இது பற்றி நெப்போலியனும் அவருடைய மனைவி சுதா இருவரும் பேட்டிகளில் பேசும்போது இந்த சுவாரஸ்யமான தகவல்களை பேசி இருக்கிறார்கள். இதுபோல எஜமான் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நெப்போலியன் தான் நடிக்கிறார் என்றதும் முதலில் நெப்போலியன் வேண்டாம் என்று ரஜினியிடம் சொன்னாராம். அதாவது அந்த பையனை பார்க்கும்போது ரொம்ப சின்ன வயசு பையன் மாதிரி இருக்கிறான் அவன் எனக்கு வில்லன் என்றால் சரிப்பட்டு வருமா? என்று ரஜினிகாந்து கேள்வி எழுப்பினாராம். ஆனால் இயக்குநர் தான் இந்த கேரக்டருக்கு நெப்போலியன் சரியாகத்தான் இருப்பார் என்று சொல்லி இருக்கிறார். பிறகு நெப்போலியன் நடித்ததை பார்த்து ரஜினிகாந்தே பாராட்டினாராம்.
நெப்போலியன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோவை நெப்போலியன் நண்பர் ஜீவன் என்பவர் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு நெப்போலியன் லைக் கொடுத்து இருக்கிறார். அதில் தான் இந்த திரைப்பட அனுபவம் குறித்து நெப்போலியன் பேசியிருக்கிறார்.