Skip to content

நான் ஏழை விவசாயி பஸ்சில் தான் போக முடியும்: முதல்வருக்கு, எடப்பாடி பதில்

  • by Authour

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார்.  நேற்று அவர்  மயிலாடுதுறையில் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

50 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை. ம அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான தகவலை முதலமைச்சர் பரப்பி வருகிறார். நாங்கள் புதிய மாவட்டத்தை கொண்டு வந்ததால் தான் நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இங்கே திறந்தீர்கள். தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் சென்று வந்துவிட்டேன். இதனால் தனது தொண்டை முழுவதும் புண்ணாகிவிட்டது.

என்னைப்பார்த்து சுந்ரா டிராவல்ஸ்   போல பஸ்சில் கிளம்பி விட்டார் என முதல்வர் சொல்கிறார். நான் ஏழை விவசாயி.  பஸ்சில் தான் போக முடியும். நீங்கள் தனி விமானத்தில் போலாம். ஹெலிகாப்டரில் போகலாம்.

ஸ்டாலின் அவர்களே சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கீழே உள்ள சக்கரம் மேலே கண்டிப்பாக வரும். உங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவோம்.

ஓரணியில் தமிழ்நாடு மூலம் திமுக கட்சியில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு கதவைத் தட்டி வீட்டில் உள்ளதை தூக்கி கொண்டு சென்று விடப் போகிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தார். இப்படி கூறிவிட்டு எதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார் ,மக்கள் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

error: Content is protected !!