திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கமிஷனர் வராததால் ஆர்ப்பாட்டம் செய்து கமிஷனரின் அறையை பூட்டுவோம் என கவுன்சிலர்கள் கூறியதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட குறைகள் பற்றி கூறினர்.
அப்போது கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள்…
பாலாறு,தென்பண்ணை, ஒகேனக்கல், ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர் திட்டமும் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ளது
அப்படி இருந்தும் முறையான குடிநீர் திருப்பத்தூர் நகர் பகுதியில் கிடைக்கப் பெறுவதில்லை.
நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் சரசு என்பவருக்கு வீட்டின் மேற்கு வரை பெயர்ந்து விழுந்ததில் தலைகள் பலத்த காயமடைந்தது அவருக்கு தங்குவதற்கு கூட தற்போது இடமில்லை மேலும் அவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் சரசு அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கமிஷனர் நேரில் சென்று கூட ஆறுதல் கூறவில்லை எனவும் குற்றம் சாட்டினர்
மேலும் இன்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கூட நகராட்சி ஆணையர் சாந்தி கலந்து கொள்ளவில்லை இதே நிலை நீடித்தால் கமிஷனர் அலுவலகத்தை பூட்டி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.