கொல்லம் மாவட்டத்தில் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின் மீது விழுந்த காலணியை எடுக்க அதில் 8ம் வகுப்பு மாணவர் மிதுன் ஏறி உள்ளர். திடீரென அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தாழ்வாக வழியாக சென்ற மின்கம்பி ஒன்று, தகரக் கொட்டகைக்கு மிக அருகில் இருந்ததாக தெரிகிறது. மாணவர் மிதுன் கொட்டகையின் மீது ஏறியபோது, அவரது உடல் அந்த மின்கம்பியைத் தொட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், மின்சாரம் உடலுக்குள் பாய்ந்து , மாணவர் திடீரென மின்கம்பி மீது விழுந்தார். அருகில் இருந்தவர்கள் பதற்றத்தில் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கும், மின்சாரத்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் இவ்வளவு அருகிலேயே மின்கம்பி போடப்பட்டிருப்பது மற்றும் பாதுகாப்பு மீறல் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
