Skip to content

கரூரில் தடகள போட்டி….VSB தொடங்கி வைத்தார்…. மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளை முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 5 நாள் நடைபெறும் பேட்டி 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் கரூர் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் இன்று தொடங்கியது. போட்டிகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் பாராஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பன் கலந்து கொண்டு ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அந்தமான்

நிக்கோபார் தீவுகள், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 852 பள்ளிகளில் இருந்து 6200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், உள்ளிட்ட அனைத்து விதமான தடகளபோட்டிகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பெறும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேடையில் பேசிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி: இவ்வளவு வீரர்கள் போட்டியில் பங்கு பெற்றாலும் மூன்று வீரர்கள் மட்டும்தான் தேர்வு செய்வார்கள் ஆனால் முயற்சியை நாம் கைவிடக்கூடாது நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என்ற நோக்கத்தோடு போட்டியில் பங்கு பெற வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!