Skip to content

கரூர்,மாயனூர் காவிரி கதவணை நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 31,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 17,062 கன அடி நீர் வந்து வந்து கொண்டிருந்த நிலையில் நீர் வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 21,876 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதில் காவிரி ஆற்றில் 20,706 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 100 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. மாயனூர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!