Skip to content

கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 94 ல் மாநகராட்சி பொது நிதியின் கீழ் அருள் கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பூங்காவை பார்வையிட்டார் இதில் சிறுவர்களுக்கு ஏராளமான விளையாட்டு உபகரங்களை பார்வையிட்டார் மேலும் பல்வேறு நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் 94வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
அருள் கார்டன் கவுரவத் தலைவர்கள் கார்த்திகேயன், மணிகண்டன், தலைவர் ஜார்ஜ், செயலாளர் சஞ்சய் காந்தி, பொருளாளர் சபாபதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!