Skip to content

இதுவரை இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்…

இந்த 2025ம் ஆண்டு இதுவரை தமிழில் எந்த பெரிய ஹீரோ நடித்த் படமும் பிளாக் பஸ்டர் வெற்றி பெறவில்லை .தக் லைப் முதல் ரெட்ரோ ,விடாமுயற்சி என்று எந்த படமும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை .ஆனால் சின்ன பட்ஜெட்டில் தயாரான ஒரு படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது .அது சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம்தான் .இந்த படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்க அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார்.இந்த நிறுவனம் இதற்கு முன்பு குட் நைட் மற்றும் லவ்வர் படங்களை தயாரித்துள்ளது  டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் லாபம் பார்த்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அதன் பட்ஜெட்டை விட 1200 சதவீதம் அதிகம் லாபம் பார்த்துள்ளது. இந்தியாவிலேயே இம்புட்டு சதவீதம் லாபம் வேறு எந்த படத்துக்கும் கிடைக்கவில்லை. குறிப்பாக இந்த வருடத்தின் அதிக வசூல் ஈட்டிய படமாக இருக்கும் சாவா கூட படத்தின் பட்ஜெட்டைவிட 800 சதவீதம் தான் அதிகம் லாபம் பார்த்திருந்தது. ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் 1200 சதவீதம் அதிக லாபம் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள ஐந்து மாதங்களிலும் இந்த சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!