கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு என்று சொசைட்டி துவக்கம், அதனை திறக்க வந்த மாவட்ட மேலாளருக்கு ஊசி மணி பாசி அணிவித்து ஆரவாரம்.
கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி பகுதியில் நரிக்குரவர் சமுதாய மக்களுக்கு என்று குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. சுமார் 25
ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு கடன் உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் முயற்சியில் வேட்டைகாரர் தாட்கோ ஆதி திராவிடர் மற்றும் டிரைபல் அட்வான்ஸ்மெண்ட் சொசைட்டி எனும் சொசைட்டி உருவாக்கப்பட்டு அதற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் போடப்பட்டு இன்று அதன் பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தும், கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது, அவருக்கு அச்சமுதாய மக்கள் பாசி, மணி, பாசிகளை அணிவித்து மகிழ்ந்தனர். அப்போது அவர், உங்களின் வாழ்வாதாரம் உயர வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தருவேன் என்றும் அதனை முறையாக திருப்பிச் செலுத்தினால் வாகனம், வீடு கடன்களை பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அப்போது அவர்கள் கைககளை தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.