Skip to content

இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மன்னர்களில் தெற்காசியா வரை படையெடுத்து சென்று, அந்த நாடுகளை வென்று, ஆட்சி செய்த பெருமை வாய்ந்த மாமன்னர் சோழன் இராஜேந்திர சோழன் ஆகும். இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக கங்கைகொண்டான் என்றும், கடாரம் வரை சென்று வென்றதன் புகழை போற்றுவிதமாக கடாரம் கொண்டான் என்றும் சிறப்பு பெயர்களில் அழைக்கப்பட்ட இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட,
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. சோழ மாமன்னர் இராசேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு நடத்திய பெருமை வாய்ந்த கலைக்கோவிலாகும். சிறப்புகள் வாய்ந்த
சோழ மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை தமிழக அரசு 2023ம் ஆண்டு முதல் அரசு விழாவாக

கொண்டாடிவருகிறது. மேலும் கடந்தாண்டு முதல் இவ்விழா நாள் அன்று தமிழ்நாடு அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்து, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளையும், இராஜேந்திர சோழன் நினைவை போற்றும் வகையில் அறிஞர்களின் சொற்பொழிவையும் நடத்தி வருகிறது. இராஜேந்திர சோழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு 21 கோடி ரூபாய் மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டு, அதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்புமிக்க விழா இன்று மாநில அரசு சார்பில் கோவில் எதிரே கொண்டாடப்படுகிறது. இன்று காலையில் மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் தொடங்குகிறவிழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் – நிர்வாகத் திறனை! போர் வெற்றிகளை ! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 12 கோடி மதிப்பீட்டில் இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் என்ற பொன்னேரியை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு உள்ளான விவசாயம் மேம்படும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னேரி அருகில் 7.25 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் சிறுவர் பூங்கா உள்ளிட்ட சிறப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொன்னேரி சீரமைப்பு என்ற உத்தரவை ஆடி திருவாதிரை விழாவை ஒட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது நீண்ட நாள் தங்களது கோரிக்கை நிறைவேற்றியது என்ற சந்தோஷத்தில் பொதுமக்கள் ராஜேந்திர சோழனை சிறப்பிக்கும் வகையில் இன்று பெருமளவில் அவரது பிறந்த நாள் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர் இதனால் கங்கைகொண்ட சோழபுரம் மீண்டும் ஒரு வெற்றி திருவிழா நிகழ்ச்சியாக கலைக்கட்டியுள்ளது.

error: Content is protected !!